இன்றைக்கு ஜோதிடம் பார்ப்பதற்கு இணையான நியூமராலஜி எனப்படும் எண் கணித பரிந்துரைகளின் படி தான், பலர் வாழ்க்கையில் புதிய விஷயங்களைத் தொடங்குகின்றனர். எண் கணித முறைப்படி வைக்கப்படும் பெயர்கள், நிறுவனத்தின் பெயர்கள், எத்தனை எழுத்துக்களில் வைக்கலாம்? இதன் மூலம் என்னென்ன நன்மைகள் மற்றும் குணாதிசயங்களைப் பெற்றிருப்பார்கள் என்பது குறித்த அனைத்து விபரங்களையும் அறிந்துக்கொள்கின்றனர். இன்றைக்கு Y, Z எழுத்துக்களில் உங்களது பெயர்கள் தொடங்கினால் என்னென்ன குணாதிசயங்கள் இருக்கும்? என்பது குறித்து விரிவாக அறிந்துக் கொள்வோம்.
எழுத்து Y: ஆங்கில எழுத்து ஒய் என பெயர்கள் தொடங்குகிறது என்றால் பெரும்பாலும் அவர்கள் சுய நலத்துடன் தான் வாழ்வார்கள். சொந்த வாழ்க்கை மட்டும் தான் உலகம் என நம்புவார்கள். இருந்தப்போதும் சில நேரங்களில் பொதுவாழ்க்கையில் ஒரு குறிக்கோளை மட்டும் வைத்து அதை மட்டும் கடைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள்- திங்கள்
அதிர்ஷ்ட எண் - 7
பரிகாரங்கள்:
Y என்ற எழுத்தில் உள்ள நபர்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க சில பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும்.
உங்களது வீட்டில் வேலைப்பார்ப்பவர்களுக்கு மஞ்சள் சேலை தானம் செய்யவும்.
மாதத்தின் ஒவ்வொரு திங்கள்கிழமைகளிலும் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும். ஆண்டிற்கு ஒரு முறையாவது ராகு, கேது பூஜை செய்யவும்.
உடல் நல ஆரோக்கியத்திற்காக சோம்பு சாப்பிடுவதை வழக்கமாக கொள்ளவும்.
பையில் செம்பு அல்லது வெண்கலப் பொருள்களை வைத்திருக்கவும்.
அசைவம், மதுபானம், புகையிலை மற்றும் தோல் ஆகியவற்றைத் தவிர்க்கவும்
எழுத்துக்கள் Z: .இசட் (Z) என்ற எழுத்தில் உங்களது பெயர்கள் தொடங்கும் நபர்கள் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆபத்தானவர்களாக மட்டும் இருப்பதோடு சிலரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். முட்டாள்தனமாக யோசிக்கும் திறனோடு துணிச்சலான சில நோக்கங்களை அடைய முயல்வார்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள் - பச்சை மற்றும் சாம்பல் நிறம்
அதிர்ஷ்டமான நாள் - சனி மற்றும் வெள்ளி
அதிர்ஷ்ட எண் -5 மற்றும் 6
பரிகாரங்கள்:
கால்நடைகள் அல்லது ஏழைகளுக்கு பச்சைக் காய்கறிகள் அல்லது பழங்களைத் தானம் செய்யவும்.
செல்லப்பிராணிகள் மீது பாசத்துடன் இருக்கவும்.
ஆண்டிற்கு ஒரு முறையாவது சனி பகவானுக்கு பூஜை செய்யவும்.
பெரியவர்கள் மற்றும் வீட்டு வேலை செய்பவர்களிடம் எப்போதும் மரியாதையுடன் இருக்கவும்.
அசைவம், மதுபானம், புகையிலை, விலங்குகளின் தோல் சம்பந்தப்பட்ட பொருள்கள் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
இதோடு A,B,C,D,E,G,I,L,P,Q,R,T,U மற்றும் Y அதிக அதிர்ஷ்ட ஆற்றல்களைக் கொண்டிருப்பார்கள் என அர்த்தம். எனவே உங்களது வீட்டில் புதிதாகப் பிறந்த குழந்தை மற்றும் ஒரு நிறுவனம், ஒரு புதிய பிராண்ட் அல்லது வீடு அல்லது ஒரு நிறுவனத்திற்கு பெயரிடுவதற்கு மேற்கண்ட முதலெழுத்துக்களைத் தேர்ந்தெடுப்பது நிச்சயம் வாழ்வில் வெற்றியை உண்டாக்கும்.